மூத்த தலைவருக்கு முதல்வர் விஜய் கொடுத்த உச்சக்கட்ட மரியாதை! – நெகிழ்ந்து போன அமைச்சர் செங்கோட்டையன்! கோட்டை வட்டாரத்தை அதிர வைத்த அந்த நிமிடம்..!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், அதிமுகவின் மூத்த முன்னாள் தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் புதிய அமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த கோட்டை வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது.

பதவியேற்பு விழா முடிந்த கையோடு, செங்கோட்டையனைத் நேரில் அழைத்துச் சென்று அவரது புதிய அமைச்சர் நாற்காலியில் முதலமைச்சர் விஜய் அமர வைத்த நெகிழ்ச்சியானக் காட்சி, தவெக மற்றும் அரசியல் வட்டாரங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, தவெக அமைச்சரவையில் கஜானாவை நிர்வகிக்கும் பவர்ஃபுல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனுக்கு, முதலமைச்சரே முன்னின்று இந்த ராஜமரியாதையைச் செய்திருப்பது இபிஎஸ் கூடாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

“>

ஒரு மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த இந்த மாஸ் ‘கெளரவம்’ சோசியல் மீடியாவில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளதோடு, 2026-ன் புதிய அரசியல் அதிரடிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author