வாரத்தில் 2-வது முறை! மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை  

Estimated read time 1 min read

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தட்டுப்பாட்டால், இந்தியாவில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 83 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
பெட்ரோல்: கடந்த வாரம் ரூ. 97.77 ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ. 98.64 ஆக அதிகரித்துள்ளது.
டீசல்: ரூ. 90.67 ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ. 91.58 ஆக உயர்ந்துள்ளது.

You May Also Like

More From Author