விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் இந்தியர்!

Estimated read time 1 min read

ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த கோபி தொடக்குரா விண்வெளிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். இதன் மூலம் விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது.

ஆந்திர பிரதேசம், விஜயவாடாவில் பிறந்தவர் கோபி தொடக்குரா (Gopi Thotakura). 30 வயதாகும் இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அங்கு அட்லாண்டா நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெஃபர்ட்-25 (Blue Origin’s New Shephard-25 ) திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்வதற்கு தேர்வாகியுள்ளார். இவருடன் சேர்ந்து 5 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருக்கின்றனர்.

ஏரோநாட்டிகல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள கோபி தொடக்குரா, விமானத்தை இயக்குவதற்கும் பயிற்சி பெற்றுள்ளார். இதனால் தான் விண்வெளிக்கு பயணம் செய்வதற்கு தேர்வாகியுள்ளார்.

இவர், எப்போது விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ளார் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author