சீன வணிகத் துறைப் பணிக் கூட்டம் கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் தேதி பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில், புதிய ஆண்டில் வணிகத் துறையின் முக்கிய பணி ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில், சீனா நுகர்வை ஊக்கவிக்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு, நுகர்வோர் பொருட்களின் புதுப்பித்தல் பணிகளை மேம்படுத்தும். வெளிநாட்டு வர்த்தகத் துறையில், வர்த்தகத்தின் உயர் தரமான வளர்ச்சியை விரைவுப்படுத்தும்.
மேலும், தொழில் சங்கிலித் துறையில் சர்வதேச ஒத்துழைப்பையும் வெளிநாட்டு முதலீட்டு ஒத்துழைப்பையும் சீனா முன்னேற்றுவிக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழ் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும்.
உலகளவில் பொருளாதார மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, இரு தரப்பு மற்றும் பல தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை செயலாக்க முறையில் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது