தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை – முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு!

Estimated read time 0 min read

தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

வட மாநிலங்களில் பசுவை பலியிடுவது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஜமாயத் உலமா – இ – ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் இறைச்சிக்காக பசுவை வளர்ப்போர் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த கோரிக்கை தொடர்பாக முஸ்லீம்கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் அகில இந்திய குரேஷி ஜமாத் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author