அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து முழுமையாக விலகி தனக்கென ஒரு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் துணிந்துள்ளார்.
தனது பிறந்தநாளான இன்று (ஜூன் 4) இறுதி முடிவை எடுத்துள்ள அவர், நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) சென்னையில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் தனது புதிய அரசியல் இயக்கம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author