“வெறும் 1 மணி நேரத்துல 1 லட்சம் பேரா?” அண்ணாமலையின் புதிய ‘We the Leader’…. அசுர வேகத்தில் மெம்பர்ஷிப் வாங்கும் மக்கள்….!! 

Estimated read time 1 min read

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து, அவர் அறிவித்த புதிய அமைப்பான ‘We the Leader’-ல் மக்கள் இணையும் வேகம் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையுமே அதிர வைத்துள்ளது. அண்ணாமலை சமூக வலைதள நேரலையில் பொதுமக்களைச் சந்தித்துத் தனது புதிய திட்டங்களை அறிவித்துப் பேசிக் கொண்டிருந்தபோதே, அவர் தொடங்கிய புதிய இயக்கத்தில் உறுப்பினர்கள் அசுர வேகத்தில் இணையத் தொடங்கினர்.

அவர் அறிவித்த ‘We the Leader’ என்ற புதிய இயக்கத்தில், நேரலை தொடங்கிய வெறும் 1 மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் www.wetheleader.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்களைப் பதிவு செய்து அலை அலையாக இணைந்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author