ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் தியான் ஜின்னில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரைநிகழ்த்தியபோது, உலகளாவிய மேலாண்மை முன்மொழிவை முன்வைக்கவும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மேலும் நேர்மையான மற்றும் நியாயமான உலகளாவிய மேலாண்மை அமைப்புமுறையைக் கட்டியெழுப்பவும், மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை நோக்கி கையோடு கைகோர்த்து முன்னேறவும் விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
இறையாண்மை சமத்துவத்தை நிலைநாட்டுவது, சர்வதேச சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது, மக்களை முதன்மையாக கொள்வது, பயனுள்ள நடைமுறைகள் மூலம் இலக்கை நனவாக்குவதில் கவனம் செலுத்துவது ஆகிய ஐந்து அம்ச கருத்துக்கள் ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளன.
தவிர ஷிச்சின்பிங் கூறுகையில், உலகில் நூறு ஆண்டுகளில் காணாத மாபெரும் மாற்றத்தை எதிர்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வழிகாட்டல் ரீதியான பங்காற்றி, உலகளாவிய மேலாண்மையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மிகப் பெரிய சந்தையின் வாய்ப்புகளை முனைப்புடன் பகிர்ந்து கொள்ளவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளுடன், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான உயர் தரமான வளர்ச்சி செயல்பாட்டு திட்டப்பணியை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் சீனா விரும்புகின்றது. சீனாவுக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் இடையே எரியாற்றல், பசுமை தொழிற்துறை மற்றும் எண்ணியல் பொருளாதாரத்துக்கான மூன்று ஒத்துழைப்பு மேடைகளையும், அறிவியல் புத்தாக்கம், உயர்நிலை கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான மூன்று ஒத்துழைப்பு மையங்களையும் சீனா அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இவ்வமைப்பின் வேறு நாடுகளுடன் இணைந்து, 10 மில்லியன் கிலோவாட் ஒளிமின்னழுத்த மின்சாரம் மற்றும் 10 மில்லியன் கிலோவாட் காற்றாலை மின் திட்டங்களை சீனா செயல்படுத்தும். மேலும், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் பெறப்படும் நலன்களை பல்வேறு தரப்புகளுடன் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.