சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

Estimated read time 1 min read

சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் ஜுன் 7ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு மே திங்கள் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பின் தொகை, 3 இலட்சத்து 44 ஆயிரத்து 220 கோடி டாலரை எட்டி, ஏப்ரல் இறுதி இருந்ததை விட 3170 கோடி டாலர் அதாவது 0.93 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

மே திங்களில் அமெரிக்க டாலர் குறியீடு உயர்வுடன், உலகின் முக்கிய நாணயச் சொத்துகளின் விலைகள் பொதுவாக உயர்ந்துள்ளன. மாற்று விகிதப் பரிவர்த்தனை மற்றும் சொத்து விலையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது என்றும் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

படம்:VCG

 

You May Also Like

More From Author