சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், அண்மையில் ஹெனான் மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
புதிய யுகத்திலும் புதிய வளர்ச்சி போக்கிலும், மத்திய பகுதிகளில் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, மஞ்சள் ஆற்று பள்ளத்தாக்கு இயற்கை சூழலின் பாதுகாப்பு, உயர்தர வளர்ச்சி முதலியவை தொடர்பாக நாட்டின் ஏற்பாடுகளைக் கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை பன்முகங்களிலும் ஆழமாக்கி, நவீனமயமான தொழில் அமைப்பையும் வேளாண்துறை சாதகம் வாய்ந்த மாநிலத்தையும், ஹெனான் மாநிலம் கட்டியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பொருளாதார வலிமை மிக்க மாநிலமாக, அடிப்படையாகத் திகழும் உண்மையான பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் தலைமையில், ஹெனானின் நிலைமைக்கிணங்க, புதிய தர உற்பத்தித் திறனையும், உயர்தர வளர்ச்சிக்கு நவீனமயமான தொழில் அமைப்பின் ஆதார ஆற்றலையும் உயர்த்த வேண்டும்.
இதற்கிடையில், விளைநிலத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத்தை வலுப்படுத்தி, தானிய பாதுகாப்பு பொறுப்பை உறுதி செய்து, நவீனமயமான வேளாண் தொழில் சங்கிலியை நீட்டித்து, நகர்புற மற்றும் கிராமப்புற பொது செழுமையை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.