ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதார மன்றக் கூட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதார மன்றக் கூட்டம் 15ம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் உருமுச்சி நகரில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் தலைவர் லியு லியேஹோங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கடந்த ஓராண்டில் சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதார மேடையின் கட்டுமானத்தை சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து முன்னெடுத்து வந்துள்ளது. ஒரு தொகுதி பயனுள்ள ஒத்துழைப்பு சாதனைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, பன்னாட்டு மக்களுக்கு நன்மை அளித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் துணை தலைமை செயலாளர் சோஹெல் ஹான் கூறுகையில், எண்ணியல் பொருளாதாரம், பன்னாடுகளுக்கு நலன் தரும் முக்கிய வழிமுறையாக மாறும். இதன் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் பயன்பாட்டை முன்னெடுப்பது, பல்வேறு தரப்புகளின் நலன்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author