சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், ஆசியான் அமைப்பின் பொதுச் செயலாளர் கோ கிம் ஹோனை சந்தித்து பேசினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
ஆசியானில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தவிரவும், சுற்றுப்புறப் பிரதேசங்களுக்கான தூதாண்மை ரீதியில் ஆசியானுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆசியான் அமைப்புடன் இணைந்து, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகக் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து, தெற்கு சீன கடல் செயல் கோட்பாட்டிற்கான கலந்தாய்வு முன்னேற்றத்தை முன்னெடுக்கவும் சீனா விரும்புவதாக என்றார்.
கோ கிம் ஹோன் கூறுகையில்,
ஆசியானின் நம்பத்தக்க முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக சீனா விளங்குகிறது. சீனாவுடன் இணைந்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, தென் சீன கடலுக்கான அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க ஆசியான் விரும்புவதாக தெரிவித்தார்.
