சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீனத் துணை அரசுத் தலைவருமான ஹன்சேங், துருக்கியில் கோப் 31 தலைவர்களின் உச்சிநாட்டில் கலந்துகொண்ட போது, உள்ளூர் நேரப்படி 10ஆம் நாளில், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஹன்சேங் கூறுகையில், கால நிலை மாற்றப் பிரச்சினையில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தொடர்புடைய இலக்குகளை வகுப்பது மற்றும் நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது. உலகளவில் காலநிலை மேலாண்மைக்கு நிலைத் தன்மையை சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.
குட்ரேஸ் கூறுகையில், பல தரப்புவாதத்திற்கு முக்கிய தூண்ணாகவும் ஐ.நாவுக்கும் முக்கிய ஆதரவளிக்கும் முக்கிய நாடாகவும் சீனா விளங்குகிறது என்று தெரிவித்தார். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற குறைப்புப் பணியில் சீனா பயனுள்ளதாக பங்காற்றியுள்ளது. காலநிலை மாற்றத்தை மேலும் சீராகச் சமாளிக்கும் வகையில் சீனாவுடன் இணைந்து மேலும் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொள்வதை எதிர்பார்கின்றோம் என்று குட்ரேஸ் தெரிவித்தார்.
