அயர்லாந்து தலைமையமைச்சர் மைக்கேல் மார்டின் பிப்ரவரி 17ஆம் நாள் அதன் தலைநகரான டுப்லினில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது வாங் யீ கூறுகையில், சீனாவும் அயர்லாந்தும் பலதரப்புவாதம் மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் உறுதியான பாதுகாவலர்களாகும். அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பதன் எழுச்சியுடன் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, உலக அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியைப் பேணிகாக்க கூட்டாகப் பாடுபட சீனா விரும்புகின்றது என்றார்.
சீனாவுடன் மேலும் நெருங்கிய கூட்டாளி உறவை வளர்க்க அயர்லாந்து விரும்புகின்றது என்று மார்டின் தெரிவித்தார்.