உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒளிபரப்பு மையம் இயக்கம்

ச்செங்தூ நகரில் நடைபெறவுள்ள உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒளிப்பரப்பு மையம் ஜூலை 18ஆம் நாள் முற்பகல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத் தலைவருமான ஷென் ஹாய்சியொங் அன்று இப்போட்டிக்கான ஊடக மையத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ஆயத்த பணிகளைச் சோதனை மேற்கொண்டார்.


அப்போது அவர் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் தலைச்சிறந்த பணிக்குழுவை உருவாக்கி, சிந்தனை, கலை, தொழில் நுட்பம் ஆகியவற்றை மேலும் ஒன்றிணைத்து, சீனத் தனிச்சிறப்புடைய ஈர்ப்பு ஆற்றல் கொண்ட விளையாட்டுப் போட்டியை முழு முயற்சியுடன் உலகத்துக்குக் காண்பிக்கும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author