லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உலகின் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நேரலை வழிகாட்டுதலுடன் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான ரைஸ் ஹிபர்ட் என்பவருக்கு இந்த நவீனப் புரட்சிகர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மூளையில் இருந்த கட்டி நரம்புகளை அழுத்தியதால் அவர் தனது பார்வையை இழக்கும் அபாயத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது
