அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்; பதிலடி தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
கடந்த இரு தினங்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை (IRGC), பிராந்தியக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை கப்பல் மீது இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், அமெரிக்க கடற்படை இந்த தாக்குதல்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தது என்றும், அமெரிக்க வீரர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் CENTCOM தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author