சர்வதேச பிரமுகர்கள் சிங்ஜியாங்கில் நட்புறவு பரிமாற்றம்

சர்வதேச பிரமுகர்களுக்கான சின்ஜியாங் நட்புறவு பரிமாற்ற கூட்டம் 8ஆம் நாள், சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஆகிய 2 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், 33 நாடுகளின் அரசு அதிகாரிகள், தொழில் மற்றும் வணிக துறையினர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், ஊடக செய்தியாளர்கள் முதலிய 300க்கும் மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் இதில் பங்கெடுத்தனர். சிங்ஜியாங்கின் மேலாண்மை அனுபவங்கள் மற்றும் தொடர்புடைய சர்வதேச முக்கியத்துவம் என்ற தலைப்பு குறித்து விருந்தினர்கள் கருத்துக்களைப் பரிமாறிகொண்டு கலந்துரையாடினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நூர்லான் யெர்மெக்பாயேவ் இதில் உரைநிகழ்த்துகையில்,

சிங்ஜியாங்கில் பல முறையாக பயணம் மேற்கொண்டுள்ளேன். உள்ளூர் பிரதேசத்தில் மாபெரும் முன்னேற்றங்களை நேரில் கண்டுள்ளேன். பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று, மேலதிகமான பயனுள்ள ஒத்துழைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த பல தரப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author