கோமின்தாங் கட்சி தலைவர் பயணத்துக்கு ஷிச்சின்பிங் வரவேற்பு

சீனக் கோமின்தாங் கட்சி தலைவர் செங் லீவன் அம்மையார் தலைமையிலான கோமின்தாங் கட்சி குழு, ஏப்ரல் 7ம் நாள் முதல் 12ம் நாள் வரை ஜியாங் சூ மாநிலம், ஷாங்காய் மாநகர், பெய்ஜிங் மாநகர் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொள்வதை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கும் வரவேற்றார் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் விவகாரப் பிரிவின் தலைவர் சுங் டாவ் மார்ச் 30ம் நாள் தெரிவித்தார்.

சீனக் கோமின்தாங் கட்சியின் அலுவலம் 30ம் நாள் வெளியிட்ட தகவலில், செங் லீவன் அம்மையார் ஷிச்சின்பிங்கிற்கு நன்றி தெரிவித்து பயணத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றும் இரு கட்சிகள் கூட்டு முயற்சியுடன், இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னெடுத்து, இரு கரை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டி, தைவான் நீரிணை அமைதி மற்றும் மக்களின் நலனுக்காகப் பாடுபட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் என்று தெரிய வந்துள்ளது.

 

You May Also Like

More From Author