வந்தவாசி, ஆக 30:.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில்,
இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற
கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை இந்திரா, அன்பால் அறம் செய்வோம் கௌரவ தலைவர் அமானுல்லா, நிறுவனர் அசாருதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் நிகழ்வில் விஜய் செல்வராஜ், அசார், சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர். உதவி ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.