நாளை முதல் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை..??

Estimated read time 0 min read

விலங்கு உரிமைகள் நல அமைப்பான பீட்டா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

விலங்குகள் நலன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கவலைகளை சுட்டிக்காட்டி நாடு தழுவிய அளவில் விளம்பர பதாகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்தியா நீண்ட காலமாக உலகத்துடன் ஆரோக்கியமான மற்றும் இறைச்சில்லா உணவு பாரம்பரியங்களை பகிர்ந்து வருகிறது.

எனவே காந்தி ஜெயந்தியான அக்.2 முதல் இறைச்சி விளம்பரங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம், உட்ரெக்ட் மற்றும் நிஜ்மெகன் உள்ளிட்ட பல நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இறைச்சி விளம்பர கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழலுக்காக எடுக்கப்பட்டது.

இந்தியாவும் இதேபோன்று கட்டுப்பாடுகளை பரிசீலிக்கலாம். இவ்வாறு பீட்டா அமைப்பு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.

You May Also Like

More From Author