“திரையுலகையே உலுக்கும் ஆக்சன் கிங் அர்ஜுனின் அதிரடி மறுஅவதாரம்!”

Estimated read time 1 min read

இந்திய திரையுலகில் மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த திரில்லர் வரிசையில் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி கண்ட ‘பொலிமேரா’ திரைப்பட வரிசையின் 3-ம் பாகம் தற்போது மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில், ‘பொலிமேரா 3’ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் சார்ஜா நடிக்கும் ‘வீராவி’ என்ற அதிரடி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணைய உலகத்தை அதிர வைத்துள்ளது.

வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மிக பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் அனில் விஸ்வநாத் செதுக்கியுள்ள இந்த பர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வீடியோ, பார்க்கும் ஒவ்வொரு ரசிகரையும் ஒருவிதமான திகிலும் மர்மமும் நிறைந்த உலகத்திற்குள் கணநேரத்தில் இழுத்துச் செல்கிறது. இருள் சூழ்ந்த பண்டைய காலத்துத் திருக்கோயிலின் பின்னணியில் தொடங்கும் இந்தக் காட்சிகள், படிப்படியாக அமாவாசை இரவின் அமானுஷ்யச் சூழலை வெளிப்படுத்துகின்றன.

சத்யம் ராஜேஷ் ‘கொமரையா’ என்ற பாத்திரத்தில் மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபடும் பதற்றமான காட்சிகளுக்குப் பிறகு, கையில் வாளேந்தியபடி கம்பீரமான அனல் பார்வையோடு நடிகர் அர்ஜுன் ‘வீராவி’ என்ற புதிய அவதாரத்தில் தோன்றுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இதுவரை நாம் கண்டிராத முற்றிலும் ஒரு புதிய கோணத்தில், ஆன்மீகமும் மாந்திரீகமும் கலந்த திகில் பின்னணியில் அர்ஜுன் களமிறங்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் சிறப்புத் தருணத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அசாத்தியமான அறிமுக வீடியோ, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

மேலும் ‘பொலிமேரா’ முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 3-ம் பாகத்தில் அர்ஜுனின் இந்த விசித்திரமான மிரட்டல் கதாபாத்திரம் திரையரங்குகளில் மாபெரும் சஸ்பென்ஸ் அலைகளை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author