3 ஆவது சீன-ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 29ஆம் நாள் சீனாவின் ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் துவங்கியது. கூட்டு வளர்ச்சி, கூட்டு எதிர்காலம் என்பது நடப்புப் பொருட்காட்சியின் தலைப்பாகும்.
உலகின் 29 நாடுகளிலிருந்து 1500 தொழில்நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. 1590 உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பொருட்காட்சியில் 1910 கோடி டாலர் மதிப்புள்ள ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக நாடாக சீனா நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.