விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
விண்ணில் பறக்க விரும்பும் பெண்களுக்கு முன்னோடியாக இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புத்தம் புதிய விண்கலத்தில் இன்று மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராக இருந்தார்.
போயிங் ஸ்டார்லைனர் என்ற விமானம் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது.