அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.
இன்று திறக்கப்பட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) கோவில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) முதல் இந்து கோவிலாகும்.
துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் இருக்கும் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் இந்த கல் கோவில் அமைந்துள்ளது.
போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் இந்து மந்திர் அல்லது BAPS இந்து மந்திர் 27 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது.