ஐபிஎல் 2025 : பஞ்சாப் அணி தக்க வைக்கும் போகும் வீரர்கள்! இவங்களும் இருக்காங்களா?

Estimated read time 1 min read

சென்னை : இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு அணி உரிமையாளர் எந்த அளவுக்கு எதிர்பார்புடன் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

மேலும், அனைத்து அணிகளும் இந்த மெகா ஏலத்திற்கு எந்த வீரர்களை வாங்கலாம், விடுவிக்கலாம் என ஆயுதத்தில் இருந்து வருகின்றனர். அதே நேரம் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகள் குறிப்பாக ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதிக்காக தான் தற்போது ஐபிஎல் அணிகள் காத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அர்ஷதீப் சிங், சாம் கர்ரன், அஷுடோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங் என இந்த 4 வீரர்களை மட்டுமே பஞ்சாப் அணி தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வீழ்ந்து கிடந்த பஞ்சாப் அணியை மற்ற 9 அணிகளும் பார்க்கும் அளவிற்கு செய்ததற்கு இந்த 4 வீரர்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கூறலாம்.

அர்ஷதீப் சிங் :

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சின் தூணாக இருந்தவர் தான் அர்ஷதீப். இவர் இக்கட்டான நிலையில் அணியை பல போட்டிகளில் மீட்டுஎடுத்துள்ளார். தற்போது இந்திய அணியின் முக்கிய பவுலராகவும் இவர் திகழ்வதால் குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இவர் பஞ்சாப் அணி தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் கர்ரன் :

நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ஷிகர் தவனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக பணியாற்றிய சாம் கர்ரன். இவர்13 போட்டிகளில் விளையாடி 123.28 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 270 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த உறுதியான செயல்திறன் மற்றும் நல்ல கேப்டன்ஷிப் அடிப்படையில், பஞ்சாப் அணி சாம் கர்ரனை தக்கவைத்துக் கொள்வதை பெரும்பாலும் விரும்புவார்கள் என கூறப்படுகிறது.

ஷஷாங்க் சிங் :

கடந்த ஐபிஎல் தொடரில் ஷஷாங்க் சிங்கின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு, பஞ்சாப் கிங்ஸ் அவரை தக்க வைத்துக் கொள்ளலாம். அந்த ஐபிஎல் சீசன் முழுவதும் முக்கிய போட்டிகளை விளையாடி, தனது அதிரடியான பேட்டிங்கால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 164.65 ஸ்டிரைக் ரேட்டில் 354 ரன்களை குவித்து, தனது அணியின் அதிகபட்ச ரன் ஸ்கோராராக விளங்கினார்.

பஞ்சாப் அணியின் கவன குறைவால் அணியில் இடம்பெற்ற இவர், பஞ்சாப் அணி இனி என்ன நேர்ந்தாலும் இப்படி பட்ட ஒரு வீரரை விடமாட்டார்கள் என கூறும் அளவிற்கு அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை பேச வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுதோஷ் சர்மா :

இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அறிமுக சீசனை படைத்த வீரர் என்ற பெருமையை அசுதோஷ் சர்மா படைத்துள்ளார், 8-வது இடத்தில் பேட்டிங் களமிறங்கியும் ஒரு ஐபிஎல் தொடரில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.

மேலும், 11 போட்டிகளில் பேட்டிங் செய்த இவர் 167.26 ஸ்ட்ரைக் ரேட்டில் 189 ரன்கள் குவித்துள்ளார். இதனால், பஞ்சாப் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த இளம் வீரரை விடுவிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author