சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவுக்கான ஆப்பிரிக்க தூதர்களுடன் சேர்ந்து, ஆப்பிரிக்க தினத்தைக் கொண்டாடினார். சுமார் 50 ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் அல்லது தற்காலிக தூதர்களும், சீனாவுக்கான ஆப்பிரிக்க லீக்கின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த செப்டம்பர் திங்களில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில், சீனாவும் ஆப்பிரிக்காவும் கையோடு கை கோர்த்து, நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்தும் 6 ஆலோசனைகளையும் 10 கூட்டாளியுறவு நடவடிக்கைகளையும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். உலக வளர்ச்சி ஆலோசனைக்கான முன்மாதிரியை நடைமுறைப்படுத்தி, சீன-ஆப்பிரிக்க கூட்டு நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்த ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனத் தரப்பும் விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.k
ஆப்பிரிக்க-சீன ஒத்துழைப்பு மீது அதிகமான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இத்தூதர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.