கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட ஏழு பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு வாந்தி மயக்கத்துடன் ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்த தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் பாக்டீரியா எனும் நுண்ணுயிர் வகையை சேர்ந்த ஒரு வகை கிருமியால் உருவாகின்றது. இந்த கிருமி தொற்றியை எலிகளின் சிறுநீர் ஊடாகவே இந்த பாக்டீரியா வெளி சூழலுக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வெளியேறிய பாக்டீரியா வயல்கள், குளம் மற்றும் குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் தங்கி விடுகின்றது.
இதனால் சிறு காயங்களுடன் வயல்களில் வேலை செய்யும் போது குலம் மற்றும் குட்டைகளில் குளிக்கும் போது மனித உடலுக்குள் நுழைந்து விடுகிறது.