திருச்சி மாவட்டத்தில் கண்ணை கவரும் வகையில் பறவைகள் பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 13.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் காட்டப்படுகிறது. அதன்படி சுமார் 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் மிகவும் அழகாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் மக்கள் அனைவரும் பொழுதுபோக்கு செய்யும் வகையில் மினி தியேட்டர்கள், சிற்றுண்டிகள் அமையும். செயற்கை முறையில் குளங்கள் , அருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களும் இயற்கைக்கு சவால் விடும் வகையில் செயற்கையாக அமைக்கப்பட இருப்பதாக கூறுகிறார்கள். இது மட்டுமின்றி சிறப் பம்சமாக அரிய வகையான பறவைகள் இந்த பூங்காவில் வளர்க்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது. தற்போது இதற்கான பணி நடந்துவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் ,மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.