ஏர்பஸ்-சின் 700-வது A320 ரக விமானம் தியான்ஜின்னிடம் ஒப்படைப்பு

ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் ஜுலை 8ஆம் நாள் வட சீனாவின் தியான்ஜின் மாநகரில் A320 விமானக் குடும்பத்தைச் சேர்ந்த 700-ஆவது விமானத்தை வழங்கியது.

180 வசதியான எகனாமிக் வகுப்பு இருக்கைகளைக் கொண்ட இந்த A320neo விமானம் செங்டு ஏர்லைன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. தியான்ஜினில் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட A320 Family Final Assembly Line Asiaஆனது ஐரோப்பாவிற்கு வெளியே ஏர்பஸ் நிறுவனம் நிறுவிய முதல் அசெம்பிளி லைன் ஆகு திகழ்கின்றது.

இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது மற்றும் வெற்றிகரமான சீனா-ஐரோப்பா ஒத்துழைப்பின் முன்மாதிரியாகவும் திகழ்கிறது. 2023 செப்டம்பர்-இல் தொடங்கப்பட்ட ஏர்பல் தியன்ஜின் விரிவாக்கத் திட்டம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த A320 குடும்ப ரேம்ப்-அப் திட்டத்திற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் மொத்தம் 10 இறுதி அசெம்பிளி லைன்கள் உள்ளன. இவற்றில் 2 சீன தியான்ஜின் மாநகரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author