ஜனாதிபதி திரௌபதி முர்மு 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவையைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு பாஜக கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சத்தீஸ்கர் மாநில முதல்வராக அசாம் மாநில முன்னாள் எம்பி ராமன் தேகாவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிஷன் ராவும், தெலுங்கானா மாநில முதல்வராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநில முதல்வராக ஓபி மாத்துரும், மேகலாயா மாநில ஆளுநராக சி.எச் விஜயும், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. கைலாசநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியாவுக்கு மணிப்பூர் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.