சீன ஊடகக் குழுமம் நடத்திய அழகான நல்லிணக்கம், மனிதகுலத்தின் பொதுவான எதிர்காலத்துடன் கூடிய சமூகம் எனும் காணொளிக் கண்காட்சி 23ஆம் நாள், ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொலி
வழியாக உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஐ.நா செயலகத்தின் அரசியல் மற்றும் அமைதி ஏற்பாட்டு விவகாரத் துறையின் ஆசிய மற்றும் பசிபிக் பிரிவின் தலைவர் பீட்டர் தோலே, ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்பு துறையின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவின் தலைவர் பிலிப்ஸ் முதலியோர் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். ஐ.நாவுக்கான நிகரகுவா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் தூதர்கள், சீன–அமெரிக்க கலை மற்றும் ஊடகத் துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.