உலகளவில் புகழ்பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி முதலீட்டாளர் சேவை நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ப்ரொஸ்பெரிட்டி வங்கி உள்ளிட்ட 10 நடுத்தர மற்றும் சிறிய வங்கிகளின் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தலை குறைத்துள்ளது.
மேலும், யூ எஸ் வங்கி உள்ளிட்ட 6 பெரிய ரக வங்கிகளை, மதிப்பீட்டைக் குறைப்பதற்குரிய கண்காணிப்பு பெயர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அவற்றின் கடன் மதிப்பீடு குறையும்
அபாயத்தில் உள்ளது. இதற்கிடையில், 11 வங்கிகளின் முன்னோக்க நிலை, எதிர்மறையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக அமெரிக்க வங்கித் துறை, பல்வகை நிர்பந்தத்தை எதிர்கொண்டு வருகிறது. நிதி திரட்டல் நிர்ப்பந்தம், கண்காணிப்பு மூலதனப் பற்றாக்குறை, வணிக வீட்டு நிலச் சொத்து துறையின் அபாய உயர்வு முதலியவை காரணமாக வங்கிகளின் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வங்கித் துறைக்கு அமெரிக்க அரசின் உதவிகள் தேவை. இது அமெரிக்க வங்கித் துறையின் பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்க வங்கித் துறையின் இந்த பலவீனம், அமெரிக்க பொருளாதாரக் கொள்கையின் திடீர் மாற்றம் மற்றும் "அசட்டுத்துணிச்சல்" போக்கின்
விளைவாகும். மூடி தன்னுடைய அறிக்கையில், பொதுவாக வட்டிகளை உயர்த்தும் விடயத்தில் அமெரிக்க வங்கிகள் மந்தமாகவே செயல்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையமானது, அமெரிக்காவில்
நிலவும் வங்கிப் பிரச்சினை தனித்துவமானது இல்லை என்றாலும் ஒழுங்கு முறை சார்ந்த ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், கண்காணிப்பு துறையின் பிரச்சினையால், அமெரிக்க வங்கித் துறையின் இடர்பாடு தீவிரமாக்கப்பட்டது. அமெரிக்கக் கடனின் பெரிய விரிவாக்கம் முதல், வட்டி விகிதக் கொள்கையின் பெரிய மாற்றம் மற்றும் அண்மையில் நிகழ்ந்த வங்கித் துறையின் நெருக்கடி ஆகியவற்றால் அமெரிக்க டாலர் மீது நம்பிக்கை இல்லா சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தலைக் குறைப்பது, அமெரிக்க பொருளாதார நிர்வாகத் திறன்களின் பற்றாக்குறைக்கான எச்சரிக்கையாகும்.