3ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி ஏப்ரல் 10 முதல் 15ஆம் நாள் வரை ஹாய்நான் மாநிலத்தின் ஹாய்கோவ் நகரில் நடைபெற உள்ளது. சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் ஏப்ரல் 3ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், வணிக அமைச்சகம் மற்றும் ஹாய்நான் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் இது பற்றி அறிமுகம் செய்தனர்.
நடப்பு பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணி, பல தரப்புகளின் ஆதரவுகளையும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் ஆக்கப்பூர்வ மறுமொழியையும் பெற்றுள்ளது. இப்பொருட்காட்சியின் பல்வேறு குறியீடுகள் கடந்த பொருட்காட்சியை விட மேலும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து முக்கிய பொருட்காட்சிகளின் மூலம் தரமான நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியை விரிவாக்கி, பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு, பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளையும் உலகப் பொருளாதார மீட்சிக்கு இயக்காற்றலையும் வழங்கியுள்ளது.
நுகர்வை கருப்பொருளாக கொண்ட பெரிய ரக சர்வதேச பொருட்காட்சியாக, சீன சர்வதேச நுகர்புப் பொருட்காட்சி, நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியை ஊக்குவிப்பதற்கும், தரமான வினியோகத்தை விரிவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.