தைவான் தீவைச் சுற்றி நடத்தப்பட்டு வரும் ரோந்து மற்றும் இராணுவப் பயிற்சி, தைவான் பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களுடன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளி சக்திகளுக்கு விடுத்த கடுமையான எச்சிரிக்கையாகும். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 10ஆம் நாள் செய்தியாளரின் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
தைவான் சுதந்திரம் என்ற பிரிவினை செயல்களும், அவற்றை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் வெளிநாட்டு சக்திகளும், தைவான் நீரிணை அமைதியின் மீதான மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டார். தேசிய இறையாண்மையையும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க சீனா வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.