உள்ளூர் நேரப்படி 8ஆம் நாள் சௌதி அரேபியாவின் தூதாண்மைப் பிரதிநிதிக் குழுவினர், ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்று, தூதரகத்தை இரு நாடுகள் மீண்டும் திறக்கும் நடைமுறையாக்க நுணுக்கங்கள் பற்றி விவாதித்தனர். மார்ச் திங்களில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தி, தூதாண்மை உறவுகளை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தனர். அதற்குப் பிந்தைய ஒரு திங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதுடன் வளர்ச்சிப் போக்கு தெளிவாக காணப்பட்டுள்ளது.
8ஆம் நாள் சௌதி அரேபியா-யேமன் பிரதிநிதிக் குழுவினர் யேமனின் தலைநகரான சனாவுக்கு சென்று, ஹுடி ஆயுதப்படைகளுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கினர்.
இது நிகழ்வு முன்னேற்றங்களைப் பெற்றால், மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் தங்கள் உட்புற கருத்து வேற்றுமைகளை சுயாதீனமாகத் தீர்க்க இது மற்றொரு வெற்றிகரமான முன்மாதிரியாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில், தனது கூட்டணி நாடுகளுடனான பாரம்பரிய பாதுகாப்பு வாக்குறுதியை வாஷிங்டன் கைவிட்டது. அதை நம்ப முடியாது என்று சில மத்திய கிழக்கு நாடுகள் கருத்து தெரிவித்தன. நெடுநோக்கு சுய நிர்ணயம் குறித்த அவர்களின் விழிப்புணர்வு தெளிவாக மேம்பட்டு வருகின்றது.
சௌதி அரேபியாவுக்கும்-ஈரானுக்குமிடையில் நல்லிணக்க இலக்கை நனவாக்கும் வகையில், சீனா பல ஆண்டுகளாக வெளிப்படையாகவும் உறுதியாகவும் பணியாற்றியுள்ளது என்று அமெரிக்காவின் வில்சன் மையத்தைச் சேர்ந்த கிஸ்ஸிங்கரின் சீன-அமெரிக்க உறவுக்கான ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ராபர்ட் டேலி கூறினார்.
மத்திய கிழக்கு பிரதேசத்தின் இணக்கப் போக்கில் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை மேம்படுத்துவது, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பு, ஒற்றுமையை முன்னேற்றுவது ஆகிய துறைகளில், சீனா தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.