சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பு மையம் செப்டம்பர் 4ஆம் நாளன்று, சீனாவின் சிங்டோவ் நகரில் நிறுவப்பட்டது. அதனுடன், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான 10 முக்கிய சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணிகளும் துவங்கியுள்ளன. உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, உயர் நிலை சாதனங்கள், நவீனமயமான உயர் திறன் வாய்ந்த வேளாண் துறை உள்ளிட்டவை இதில் அடக்கம்.
இவ்வமைப்பின் மூலம், இப்பிரதேசங்களின் ஒருங்கிணைந்த புத்தாக்கம் விரைவுபடுத்தப்பட்டு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றல் கொண்டு வரப்படும். மேலும், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கென சர்வதேசச் சிந்தனைக் கிடங்கு மற்றும் கூட்டணியும் நிறுவப்படும். பல தரப்புகளுடன் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கக் கொள்கை மற்றும் நடைமுறை அனுபவங்கள் குறித்து விவாதித்து, சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கு விவேக ஆற்றலும் அளிக்கப்படும்.
