சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத்தலைவருமான ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான் ஆக்ஸ்டு 19ஆம் நாள் காலை மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத்தலைவருமான டோலாமின் துணைவியார் வூஃபாங்லீயை சந்தித்துப் பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங்குடன் இணைந்து வியாட்நாமில் பயணம் மேற்கொண்ட நினைவுகளை பெங்லியுவான் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார். சீனாவும் வியட்நாமும் இலக்கியம், கலை, உணவுகள் ஆகிய துறைகளில் ஒத்த கலாச்சாரங்களைக் கொண்டுள்ளன. இரு தரப்பும் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, பரஸ்பர புரிந்துணர்வை ஆழமாக வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக பெங்லியுவான் தெரிவித்தார்.
சந்திப்பைத் தொடர்ந்து அவர்கள் சீனாவின் இசை நாடகம், நடனம், நாட்டுப்புற இசை உள்ளிட்ட அரங்கேற்றங்களைக் கண்டு ரசித்தனர். வூஃபாங்லீ கூறுகையில், எழில்மிக்க சீனப்பண்பாடு ஆர்வத்தைத் தூண்டுகிறது. இருதரப்பும் பண்பாட்டு பரிமாற்றத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதை எதிர்ப்பார்த்துள்ளேன் என்று கூறினார்.