ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.
நிலையான போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் மின்சார வாகனங்கள் வகிக்கும் பங்கையும் அங்கீகரிக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வாகனங்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், இது தொடர்பான அனைத்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை மையப்படுத்த ஒரு தீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தீமாக, ‘ஒன்றாக மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் உலக எலக்ட்ரிக் வாகன தினம் 2020இல் நடத்தப்பட்டது. அது அன்றிலிருந்து பிரபலமடைந்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய இ-மொபிலிட்டி பிரச்சாரமான உலக எலக்ட்ரிக் வாகன தினம் அதன் ஐந்தாவது ஆண்டில் நுழைவது, எலக்ட்ரிக் வாகன வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.