விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தின்போது, அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாககவும், வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலையை சுற்றியிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 4 மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்து வருவதால் யாரும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் பலர் அலறியடித்து ஓடிய நிலையில், மற்ற தொழிலாளர்கள் நிலையை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான முழு விசாரணைக்கு பிறகே, தொழிலாளர்கள் நிலை மற்றும் சேத விவரங்கள் பற்றி தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்து!#sattur | #FireAccident pic.twitter.com/WtHhHt2Oro
— Jeevalenin (@jeevalenin) September 28, 2024