சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தை

சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கான தலைவரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல். யெலன் அம்மையாருடன் ஏப்ரல் 5 மற்றும் 6ஆம் நாள் குவாங்சோ நகரில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்துவது, இரு நாடுகள் மற்றும் உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழ்நிலை, சீன-அமெரிக்கப் பொருளாதார உறவு மற்றும் உலகளாவிய அறைக்கூவல் ஆகியவற்றைக் குறித்து இரு தரப்புகள் ஆழமாகவும், பயன்தரும் முறையிலும் பரிமாற்றம் மேற்கொண்டன.


மேலும், சீனாவின் மீது அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக தடை நடவடிக்கைகள் குறித்து சீனா கடும் கவலையைத் தெரிவித்து, உற்பத்தித் திறன் பற்றி முழுமையாகப் பதில் அளித்தது. தொடர்ச்சியாக தொடர்புகளை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

You May Also Like

More From Author