நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).
இது சந்திர பயணங்கள் மற்றும் ஆய்வுகளை திட்டமிடுவதை எளிதாக்குகிறது, இது நிரந்தர தளத்தை நிறுவுவதற்கான எங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு உதவும் என நாசா தெரிவிக்கிறது.
இதைச்செய்ய, அமெரிக்க அரசாங்கம், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தர அமைப்புகளுடன் இணைந்து செயல்பட நாசா திட்டமிட்டுள்ளது.