சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள், 2025 உலக நுண்ணறிவுத் தொழில் துறைக் கண்காட்சிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில், தற்போது, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பப் புத்தாக்கம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதனால், மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையிலும் உலகத் தொழில் துறையின் கட்டமைப்பிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இத்தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்தினைத் தொழில் துறையின் புத்தாக்கத்துடன் ஆழமாக ஒருங்கிணைந்து, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர் தர வளர்ச்சியைத் தூண்டி, மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் துணை புரிய வேண்டும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், மனித குலத்திற்கு நலன் தரும் ஒன்றாகும். சீனா உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பரந்தளவில் சர்வதேச ஒத்துழைப்புகளை விரிவாக்கி, வளர்ச்சி நெடுநோக்கு, நிர்வாக விதிகளை வகுத்தல், தொழில் நுட்ப வரையறையை இயற்றுதல் ஆகிய துறைகளில் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.