குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தசரா விழாவை முன்னிட்டு பூஜ் ராணுவ தளத்தில் ஆயுத பூஜை செய்த பின்னர் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை குறிப்பிட்டு, இந்தியாவின் பாதுகாப்பை சவாலாக எடுத்த பாகிஸ்தான் முயற்சிகள் தோல்வியடைந்ததாகக்கூறினார்.
“லே முதல் சர் க்ரீக் வரை பாகிஸ்தான் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சிகள் முற்றாக தோல்வியடைந்தன. இந்திய படைகள் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்து தாக்கின, இது உலகத்திற்கு நம்மால் எப்போதும், எங்கும் பதிலடி அளிக்க முடியும் என்பதை தெளிவாக காட்டியது,” எனக்கூறினார்.
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர்
