இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு தேசிய அளவில் அதிகரித்து வருகிறது.
ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 32 மில்லியனாக இருந்த நிலையில், இன்று 101 மில்லியனாக உயர்ந்துள்ளது.
முக்கியமாக, இளம் வயதினரிடையே உடல் உழைப்பின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் டைப் 2 நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது.
நீரிழிவு நோய் கண், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது பொதுவாகத் தெரிந்தாலும், இது நம்முடைய உடல் இயக்கத்தை (Mobility) எப்படி அமைதியாகப் பாதிக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உயர் இரத்தச் சர்க்கரை அளவு முழங்கால் வலி, கைகள் மற்றும் முதுகெலும்பில் நெகிழ்வுத்தன்மை குறைதல் போன்ற வியத்தகு வழிகளில் உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயால் இவை மட்டும் பாதிக்காது; நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை
