தைவான் தங்களுடன் ஒருங்கிணைந்த நாடு என சீனா உரிமை கொண்டாடி வருவதோடு, லடாக் எல்லையிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவிபடுத்தி வருகின்றது.
இந்நிலையில் இந்திய நாட்டுடன் தைவான் நெருக்கம் காட்டுகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தைவான் தூதராக அலுவலகத்தை மும்பையிலும் திறந்து உள்ளது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடுவதால் இந்தியா உடனான தொடர்பை தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்பந்தமாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நியாங் பேசிய போது, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தைவான் விளங்குகின்றது.
ஆகவே அவற்றோடு எந்த ஒரு அதிகார தொடர்பையும் இந்தியா வைத்துக் கொள்ள கூடாது என்று கூறியுள்ளார். அதோடு பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள் தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்த கூடாது என்றும், சீன இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் இந்த பிரச்சனை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.