தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, கோவை – சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், சோலையார், வால்பாறை பகுதியில் 7 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
