அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தில் வலிமையான அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தை நிறுவினால், 100% வரி விதிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.
பிரிக்ஸ் குழுவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் புதிதாக நுழைந்து உள்ளன.
“இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்கவோ மாட்டோம்.” என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் எழுதினார்.
இந்த நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.