சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் கோட்டைமேடு பகுதியில் ராமு(27) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு மோகனாம்பாள்(19) என்ற மனைவி உள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் மோகனாம்பாள் வேட்டைக்காரனூர் பாலத்திலிருந்து குதித்தார்.
அவரை காப்பாற்றுவதற்காக ராமவும் தண்ணீரில் குதித்தார். நள்ளிரவு நேரம் செல்போன் டவர் பிடித்து கொண்டு உயிருக்கு போராடி ராமுவை அந்த பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.