சீனாவின் நிபுணர்கள் குழு ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையம் அருகிலுள்ள கடற்பரப்பில் எடுக்கப்பட்ட கடல் நீர் மாதிரி, அண்மையில், சீனாவுக்குச் சென்றடைந்தது.
சீனாவின் தொழில்சார் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த மாதிரிகளை சோதனை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. முன்னேற்றம் இருந்தால் முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியான் 3ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்துக்களின்படி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் என்ற கட்டுக்கோப்புக்குள், ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கடலுக்குள் திறந்து விடப்பட்ட கதிர்வீச்சு நீர் மீது நீண்டகாலமாக சர்வதேச கண்காணிப்பு மேற்கொள்ள ஜப்பான் ஒப்புக்கொண்டது. சீனா உள்ளிட்ட நலன்கள் தொடர்புடைய நாடுகள் கடல் நீர் மாதிரியை தனி தனியாகச் சேகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.